பயங்கர அதிர்ச்சி... நீட் தேர்வில் தோல்வி... சென்னை மாணவர் தற்கொலை!

பயங்கர அதிர்ச்சி... நீட் தேர்வில் தோல்வி... சென்னை மாணவர் தற்கொலை!

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 19 வயது மாணவர், இருமுறை முயன்றும் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துள்ளார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரி சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசேதாவை கிடப்பில் போட்ட ஆளுநர் ஆர்என் ரவி நீண்ட நாட்களுக்கு பிறகு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். இன்னும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் நீட் இளநிலை தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்த மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கடந்த 12ம்தேதி நடைபெற்றது. இதில் அந்த மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் பங்கேற்றனர். மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்றினார். மேலும் மாணவர்கள், பெற்றோர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் தந்தை, நீட் தேர்வுக்கு எப்போது தடை விதிக்கப்படும்? என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு ஆளுநர் ஆர்என் ரவி, ‛‛நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பது என்பது மாணவர்களின் போட்டிபோடும் திறனை கேள்விக்குறி ஆக்கிவிடும். நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுக்கலாம். நீட் தேர்வுக்கான விலக்கு அறிவுசார்ந்த மாணவர்களை மாற்றுத்திறனாளிகளாக மாற்றி விடும். எனவே நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன்" என்று திட்டவட்டமாக கூறினார்.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 19 வயது மாணவர் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துள்ளார். குரோம்பேட்டையில் வசித்த வந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் மருத்துவம் படிக்கும் நோக்கத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். 2 முறை நீட் தேர்வு எழுதினார். ஆனால் அவரால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவருத்தத்தில் இருந்த ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in