30 கி.மீ வேகத்தில் தான் செல்ல வேண்டும்: சென்னையில் வேகக்கட்டுப்பாடு அமல்!

வாகன சோதனை (கோப்பு)
வாகன சோதனை (கோப்பு)

சென்னையில் அனைத்து வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி அனைத்து வாகனங்களும் அதிகபட்சமாக 30 கி.மீ வேகத்தில்தான் செல்ல முடியும்.

வேகக் கட்டுப்பாட்டு கருவி
வேகக் கட்டுப்பாட்டு கருவி

சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சாலை உள்கட்டமைப்பு போன்ற அம்சங்களை ஆய்வுசெய்து, அதன் அடிப்படையில் வாகனங்களின் வேகத்தைப் புதிதாக வரையறுக்க ஆறு பேர்கொண்ட ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பது குறித்த கட்டுப்பாட்டு விதிகள், 2003-ம் ஆண்டு வரையறுக்கப்பட்டன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய விதி தற்போது அமலுக்கு வருகிறது. மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் பல்வேறு வகையான வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு குறித்து ஆய்வுசெய்த குழுவினர், சென்னைக்கான புதிய விதிகளை வரையறுத்துள்ளனர்.

இருசக்கர வாகன நெரிசல் (கோப்பு)
இருசக்கர வாகன நெரிசல் (கோப்பு)

அவை இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, புதிதாக நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகள்படி, சென்னையில் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை ஆட்டோக்கள் 35 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 25 கி.மீ வேகத்திலும் செல்லலாம். அதேபோல் கனரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை 40 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 35 கி.மீ வேகத்திலும் செல்லலாம்.

இலகுரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை 50 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 40 கி.மீ வேகத்திலும் செல்லலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in