அதிர்ச்சி... பெண்களின் உள்ளாடைகளை திருடும் சென்னை சைக்கோ!

தாம்பரம் சைக்கோ இளைஞர்
தாம்பரம் சைக்கோ இளைஞர்

சென்னை கிழக்கு தாம்பரம், இரும்புலியூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில், கடந்த சில நாட்களாக மாஸ்க் அணிந்த நபர் ஒருவர் அங்குள்ள வீடுகளை நோட்டமிட்டு வந்துள்ளார். அதில், ஆண்கள் இல்லை என்பதை அறிந்துகொள்ளும் அந்த நபர் பெண்களிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி, பெண்கள் துவைத்து காயப்போட்டிருக்கும் உள்ளாடைகளை திருடிக்கொண்டும் தப்பிச்செல்கிறார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

தாம்ரம் சைக்கோ இளைஞர்
தாம்ரம் சைக்கோ இளைஞர்

இரும்புலியூரில் உள்ள பழைய எம்.எஸ்.பி சாலை, முருகன் தெரு, வீரபத்திரன் தெரு ஆகிய பகுதிகளில் இந்த மர்ம இளைஞரின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சைக்கோ இளைஞரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டும் புகார் அளிக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது. ஒரு சிலர் சிசிடிவி ஆதாரத்துடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தாம்ரம் சைக்கோ இளைஞர்
தாம்ரம் சைக்கோ இளைஞர்

சில மாதங்களுக்கு முன்பு ஆதம்பாக்கத்திலும் இதேபோன்று கைவரிசை காட்டி வந்த நபர் காவல்துறை வசம் பிடிபட்டார். தற்போது, தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் சுற்றும் நபர் ஆதம்பாக்கம் குற்றவாளியா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இதனால், காவல்துறையினர் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி, பெண்களிடம் அத்துமீறும் சைக்கோவை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in