அதிரடி... போலீஸாரை தாக்கிய 5 பேர் கைது!

போலீஸை தாக்கிய 5 பேர் கைது
போலீஸை தாக்கிய 5 பேர் கைது

சென்னையில் போலீஸாரை தாக்கிய 5 பேரை கைது செய்துள்ள போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் சிலர் மதுபோதையில் தகராறு செய்வதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்திருக்கிறது. அதனை விசாரிக்க ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சென்றிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த ரவுடி பிரபுவை காவல்துறையினர் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

ரவுடி பிரபு
ரவுடி பிரபு

அப்போது, தனது செல்போனை தவறவிட்டதாக ரவுடி பிரபு கூறியிருக்கிறார். இதையடுத்து ரவுடி பிரபுவை காவலர் நாகேந்திரன் அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் பிரபுவின் கூட்டாளி என நினைத்து காவலர் நாகேந்திரன் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

இதில் பலத்த காயமடைந்த காவலர் நாகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய ரவுடி கும்பலை காவல்துறையினர் தேடி வந்தனர். இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த, உதயா, ரவிக்குமார், சக்திவேல், செல்வம், வெற்றி ஆகிய 5 பேரை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in