
மகனுக்கு திருமணமாகவில்லை என போலி சான்று தயாரித்து அதன் மூலம் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்த தந்தையின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்தவர் பாரதி (45). இவர் சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், தன் பெயர் பாரதி என்றும், தன்னுடைய கணவர் பெயர் விஜயகுமார் என்றும், அவர் கடந்த 2007ம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், தன் கணவர் விஜயகுமார் பெயரில் சென்னை பெரவள்ளூரில் ரூ.5 கோடி மதிப்பில் நிலத்துடன் கூடிய வீடு இருக்கிறது.
அதனை சென்னை மாதவரத்தில் வசித்து வரும் தனது மாமனார் செங்கோடன் (71) மோசடி செய்து அபகரித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அதாவது, தனது கணவர் விஜயகுமார் இறந்த நிலையில், அவருக்கு திருமணம் ஆகவில்லை என கூறி போலிச்சான்று பெற்று, கணவரின் பெயரில் இருந்த சொத்தை மோசடியாக தனது பெயருக்கு மாற்றிக்கொண்டதாக தெரிவித்திருந்தார். எனவே, அவர் மீதும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த நில மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதில், செங்கோடன் மோசடி செய்தது அம்பலமானது. இதையடுத்து, போலீஸார் அவரையும், அவரது கூட்டாளி கானாத்தூர் லோகநாதன் (51) என்பவரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சிலரை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள். சொந்த மகனின் சொத்துக்களையே மோசடி செய்த அபகரித்த தந்தையின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!
மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!
’லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!
வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!
அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!