சென்னையில் பரபரப்பு... பைக் டாக்ஸியில் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

கைது செய்யப்பட்ட ரமேஷ்
கைது செய்யப்பட்ட ரமேஷ்

சென்னை சூளைமேட்டில் இருந்து 23 வயது இளம்பெண் நேற்றிரவு ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல ஓலா பைக் டாக்சி புக் செய்தார். பைக்கை மதுராந்தகத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டினார். பைக்கில் செல்லும் போதே ரமேஷ் அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆபாசமாக பேசி வந்ததாகவும் தெரிகிறது. இதனை அந்த பெண் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். மேலும் தனது குடும்பத்தினருக்கு மெசேஜ் மூலமாகவும் பைக் டாக்ஸி ஓட்டுநரின் செயல் குறித்து தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ரமேஷ்
கைது செய்யப்பட்ட ரமேஷ்

இதையடுத்து, பதற்றத்துடன் மகளுக்காக காத்திருந்த பெற்றோர், வீட்டிற்கு வந்ததும் பைக் ஓட்டி வந்த ரமேஷை பிடித்து ராயப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். ராயப்பேட்டை போலீசார் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி கைது செய்தனர். இதனையடுத்து, பைக் டாக்சி ஓட்டுநர்கள் அனைவரையும் அழைத்து போலீஸார் அறிவுரை வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in