பிரபல மென்பொருள் நிறுவனத்தில் தீ விபத்து... அலறியடித்து வெளியேறிய ஊழியர்கள்!

சென்னை மென்பொருள் கட்டிடத்தில் தீ விபத்து
சென்னை மென்பொருள் கட்டிடத்தில் தீ விபத்து

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள துரைப்பாக்கத்தில் ஏ.எஸ்.வி சன்டெக் பார்க் ஐடி கட்டிடம் உள்ளது. இங்கு, 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருவதோடு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை இந்த கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த கட்டிடத்தின் 9 வது மாடியில் இயங்கி வரும் கேன்டீனில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ அதிகமாக பரவி கட்டிடத்தின் மேற்பகுதியில் கரும்புகை எழுந்துள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து மேடவாக்கம், வேளச்சேரி , துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதோடு, உள்ளே யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்றும் தேடி வருகின்றனர். இந்த தீவிபத்து காரணமாக பழைய மகாபலிபுரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in