ஏத்து வண்டியில... தெருவில் சுற்றித்திரிந்த மாடுகளை அதிரடியாக பறிமுதல் செய்த சென்னை மாநகராட்சி ஆணையர்!

சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் (கோப்பு படம்)
சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் (கோப்பு படம்)

சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை அதிரடியாக பறிமுதல் செய்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த சிறுமியை தெருவில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று முட்டியது. இதில் சிறுமி படுகாயம் அடைந்த நிலையில், அது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து உரிமையாளர்களின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து இன்று காலை திருவல்லிக்கேணி பகுதியில் முதியவர் ஒருவரை மாடு ஒன்று முட்டியது. மாநகராட்சி வீதிகளில் வளர்ப்பு மாடுகளை கேட்பாரற்று திரியவிடும் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இருந்த போதும் மாட்டின் உரிமையாளர்கள் பலர், மாடுகளை தெருவில் விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

சிறுமியை மாடு முட்டிய சம்பவம்
சிறுமியை மாடு முட்டிய சம்பவம்

இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் முதியவரை மாடு முட்டிய இடத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலையில் சுற்றித்திரிந்த 2 மாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டியை உடனடியாக பறிமுதல் செய்யுமாறு அவர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டன.

சென்னை வீதிகளில் மேய விடப்படும் மாடுகள்
சென்னை வீதிகளில் மேய விடப்படும் மாடுகள்

மாட்டின் உரிமையாளர்கள் அபராதத்தை கட்டிவிட்டு அதன் பின்னரே மாடுகளை திரும்பப் பெற முடியும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.

இதுபோன்று மாடுகளை தொடர்ந்து சாலைகளில் சுற்றித் திரியவிட்டால் மாட்டின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in