வேலை கிடைக்காத விரக்தி... பட்டதாரி இளம்பெண் தற்கொலை!

இளம்பெண் ஸ்வேதா
இளம்பெண் ஸ்வேதா

சென்னை ஆவடி திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சுபா. இவர்களுக்கு இரண்டு மகள்கள். அதில், மூத்த மகளின் பெயர் ஸ்வேதா. அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பி.காம் பட்டபடிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

இவருக்கு நீண்ட காலமாக வேலை கிடைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10-ம் தேதி அம்பத்தூரில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு நேர்முக தேர்வுக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை என தெரிகிறது.

இதன் காரணமாக மனமுடைந்த அவர், வெளியே சென்றிருந்த தன் தாய் சுபாவிடம் போனில் பேசிவிட்டு தூங்கச் செல்வதாக கூறிவிட்டு தனது அறைக்கு சென்றார். மாலை வீடு திரும்பிய அவரது பெற்றோர் வந்து பார்த்தபோது மகள் சுவேதா தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், கதறித்துடித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உடனடியாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், ஸ்வேதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்வேதா பள்ளி அளவில் 12-ம் வகுப்பில் முதலிடம் பிடித்தவர் என்பதும், படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருந்துள்ளது. தனது தங்கை வேலைக்குச் சென்று குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் நிலையில், தன்னால் குடும்பத்துக்கு உதவ முடியவில்லையே என்ற மனவிரக்தியில் இந்த துயர முடிவை எடுத்ததாக தெரியவந்துள்ளது.

மேலும், இதுகுறித்து வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!

பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை

க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!

இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்

மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in