மனைவியுடன் தகராறு... தன்னைத் தானே பிளேடால் கிழித்துக் கொண்ட கணவர்!

தன்னைத் தானே பிளேடால் கிழித்துக்கொண்ட கணவர்
தன்னைத் தானே பிளேடால் கிழித்துக்கொண்ட கணவர்

செங்கல்பட்டு அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராரில் வாலிபர் ஒருவர் தனது உடல் முழுவதும் பிளேடால் கிழித்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்தவர் சாஜித்பாஷா வயது 42. இவருக்கு ஆபிதாபேகம் (38) என்ற பெண்ணுடன் திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், சாஜித்பாஷாவுக்கு மதுப்பழக்கம் உள்ளதால் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன், மனைவி இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

வழக்கம் போல் நேற்று முந்தினம் சாஜித்பாஷா, ஆபிதாபேகம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கை கலப்பாக மாறியதாக தெரிகிறது. இதில் கடும் ஆத்திரமடைந்த சாஜித் பாஷா மனைவி ஆபிதாபேகத்தை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், கோவித்துக்கொண்டு மனைவி தாய் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, தனது மனைவியின் சொந்த ஊரான செங்கல்பட்டு அருகே உள்ள வில்லியம்பாக்கம் பகுதிக்கு சென்ற சாஜித்பாஷா மது போதையில் மாமியாரிடமும் சண்டையிட்டுள்ளார். அப்போது இருவருக்குள் வாக்குவாதம் முற்றியதில், வீட்டை விட்டு வெளியே போகச்சொல்லி மாமியார் சத்தமிட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சாஜித்பாஷா தனது சட்டை பையில் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்து மற்றும் உடலில் சரமாரியாக கிழித்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in