
கம்பம் பகுதியில் மானை வேட்டையாடிய சிறுத்தை மலையடிவாரத்தில் உடலை விட்டுச் சென்றுள்ளதால் பொதுமக்கள் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், கம்பம் நகரிலிருந்து கேரளாவுக்கு செல்லும் கம்பம் மெட்டு மலைச்சாலையில் உள்ள தனியார் பள்ளியின் அருகே ஒரு வயது மதிக்கத்தக்க மான் ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை, சிறுத்தை புலி கடித்துத் தின்றுவிட்டு பாதி உடலை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
மேலும், வனத்துறையினர் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய்களையும் சிறுத்தை தாக்கியுள்ளது தெரியவந்தது. அதனை அறிந்த வனத்துறையினர் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மானின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக வனத்துறையினர் கொண்டு சென்றுள்ளனர். மேலும், மானை கடித்தது சிறுத்தையா? அல்லது செந்நாயா? என மருத்துவர்கள் கூறிய பின்பே உறுதி செய்ய முடியும். அதுவரை இந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை அறிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!
நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!
பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!