ராஜகோபால் சதீஷ்
ராஜகோபால் சதீஷ்

ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டார்... தமிழக கிரிக்கெட் வீரர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்!

Published on

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர், ஐபிஎல் கிரிக்கெட் வீரரான ராஜகோபால் சதீஷ் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி கர்ப்பமாக்கிவிட்டதாக போலீஸாரிடம் புகாரளித்துள்ளார்.

பெருங்குடியில் உள்ள உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் கரிஷ்மா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). கிரிக்கெட் வீரரான ராஜகோபால் சதீஷ், டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி மூலமாக அறிமுகமாகி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணியில் இடம்பெற்று விளையாடி உள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு முதல் இவர்கள் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஒரு சில வருடங்கள் கழித்து ராஜகோபால் சதிஷ் மற்றும் கரிஷ்மா காதலித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்வதாக கூறி, ராஜகோபால் சதீஷ் பெருங்குடியில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு அழைத்து சென்று பலமுறை கரிஷ்மாவுடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு கால கட்டத்தில் ராஜகோபால் சதீஷ் சொந்த ஊரான திருச்சிக்கு சென்று இருந்தார். நீண்ட நாட்களாக திரும்பி வராத காரணத்தில் கரிஷ்மா திருச்சி சென்று பார்த்துள்ளார். அப்போது ராஜகோபால் சதீஷுக்கு சாம்பவி என்ற மனைவி இருந்ததாகவும், இதனால் அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அங்கிருந்து வந்துள்ளார். இதையடுத்து ராஜகோபால் சதீஷ் உடனான தொடர்பை கரிஷ்மா துண்டித்துள்ளார்.

ராஜகோபால் சதீஷ்
ராஜகோபால் சதீஷ்

இந்த நிலையில், கடந்த 21.12.2022 தேதி பரத் என்பவருடன் கரிஷ்மாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் இருவருக்கும் இடையேயான திருமண வாழ்க்கை 3 மாதங்கள் மட்டுமே நீடித்தது. இவர்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதனையடுத்து பெருங்குடியில் கரிஷ்மா அவரின் பெற்றோருடன் இருந்தபோது கடந்த ஆண்டு மே மாதம் செல்போனில் தொடர்பு கொண்டு, நாம் மீண்டும் நட்பை தொடர வேண்டும் என ராஜகோபால் சதீஷ் கூறியுள்ளார்.

இதனையடுத்து மீண்டும் இரண்டு பேரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் கொடைக்கானல் சென்று அங்கு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதன் விளைவாக கரிஷ்மா தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். இந்த விஷயம் தெரிந்த ராஜகோபால் சதீஷின் மனைவி சாம்பவி, நண்பர் சுரேகா ஆகியோர் தன்னை கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி மிரட்டுவதாக அடையாறு காவல் துணை ஆணையரை சந்தித்து கரிஷ்மா புகார் மனு கொடுத்துள்ளார். அதன் பேரில் தரமணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in