புதுகை வங்கியில் 13.75 கிலோ நகைகள் திருட்டு... 5 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ விசாரணை தொடக்கம்!

புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி
புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி

புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற திருட்டு வழக்குத் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை நகரின் மத்தியில் தேசிய மயமாக்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இங்கு 4.84 கோடி ரூபாய் மதிப்புள்ள 13.75 கிலோ நகைகள் மாயமானதாக புகார் அளித்தது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், வங்கியில் பணிபுரிந்து வந்த ஊழியர் மாரிமுத்து உட்பட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து தனிப்படையை அமைத்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

சிபிஐ
சிபிஐ

ஆனாலும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என வழக்கு சிபிசிஐடி காவல் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆயினும், ஆண்டுகள் பல கடந்தும், இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என வங்கி தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த திருட்டு வழக்கு சம்பந்தமாக போலீஸார் தேடி வந்த மாரிமுத்து என்பவர் மீமிசல் கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். வங்கியில் தற்போது பணி புரிந்து வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் 4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் திடீரென வங்கியில் ஆய்வு செய்ததால், வாடிக்கையாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

அமெரிக்காவை அதிரவைக்கும் செக்ஸ் ஸ்டிரைக்... மனைவிகள் போராட்டத்தால் கதறும் கணவர்கள்

மகனுக்கு சீட் இல்லை... திமுக தலைமை மீது பொன்முடி அதிருப்தி!

சுயேச்சைகள் ஆட்டம் ஆரம்பம்... சவப்பெட்டியுடன் வேட்புமனு தாக்கலுக்கு வந்த வேட்பாளர்!

எலெக்‌ஷன் நேரத்துல மூச்சு விடக்கூட பயமா இருக்கு... நடிகர் ரஜினிகாந்த் மிரட்சி!

களமிறங்கும் விஜயகாந்த் குடும்பம்... விருதுநகரில் விஜய பிரபாகரன்; கள்ளக்குறிச்சியில் சுதீஷ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in