கல்லூரி மாணவிக்கு பாலியல் டார்ச்சர்; காஸ்டிங் டைரக்டர் கைது!

கல்லூரி மாணவிக்கு பாலியல் டார்ச்சர்
கல்லூரி மாணவிக்கு பாலியல் டார்ச்சர்

தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை தாக்கி பலாத்காரம் மற்றும் கொலை முயற்சிகளை மேற்கொண்டதாக பாலிவுட் இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகாரை சேர்ந்தவர் தீபக் மலாகர். 26 வயதாகும் இவர் பாலிவுட்டில், கதாபாத்திரங்களுக்கு உரிய நடிகர் நடிகையரை தேர்வு செய்யும் காஸ்டிங் டைரக்டராக பணியாற்றுகிறார். இவருக்கு அண்மையில் ஃபேஸ்புக் வாயிலாக கல்லூரியில் பயிலும் 18 வயது மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த மாணவிக்கு பாலிவுட்டில் படிப்பது இலட்சியமாக இருந்ததில், தீபக் மலாகர் உதவியை விரும்பினார். தீபக் நேரடியாக அந்த மாணவியை மணக்க விரும்பியதோடு, மாணவியின் பெற்றோரிடமும் அது தொடர்பாக அனுமதி பெற்றிருந்தார்.

மாணவி தனது கல்லூரி படிப்பு முடித்து, பாலிவுட் கனவை ஈடேற்றியதும் மண வாழ்க்கையில் இணையலாம் என திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையே மும்பை அபார்ட்மெண்ட் ஒன்றில் தனியாக வீடெடுத்து, இருவரும் சேர்ந்து தங்கியபடி தங்கள் பணிகளை பார்த்து வந்தனர்.

ஆனால் கல்லூரி மாணவியை அடைவதே தீபக் மலாகரின் ரகசிய ஆசையாக தொடர்ந்ததில், இருவருக்கும் இடையே இது தொடர்பாக அவ்வப்போது சச்சரவு எழுந்திருக்கிறது. இதற்கிடையே வெர்சோவில் இருக்கும் நண்பனின் அறைக்கு கல்லூரி மாணவியை அழைத்துச் சென்ற தீபக், அங்கே அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

கல்லூரி மாணவி அதற்கு பிடிவாதமாக மறுப்பு தெரிவிக்கவே, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் வெடித்தது. இதன் உச்சமாக கல்லூரி மாணவியின் தலையை சுவற்றில் மோத செய்து, அவரது முகத்தை சிதைக்க தீபக் முயன்றிருக்கிறார். இந்த சித்திரவதையில் மாணவியின் மண்டை உடைந்து மயக்கமாக, அவர் இறந்து விட்டதாக கருதி தீபக் தலைமறைவானார்.

பின்னர் மயக்கம் தெளிந்த மாணவி அபயக்குரல் எழுப்பியதில், பக்கத்து வீட்டார் உதவியோடு அவர் மருத்துவமனையின் ஐசியூ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தனது செல்போனை அணைத்து விட்டு தீபக் தலைமறைவானதில், போலீஸாரின் தேடுதல் வேட்டை முடங்கியது. இதனிடையே நேற்றிரவு தனது ஏடிஎம் கார்டை தீபக் உபயோகிப்பதை மும்பை சைபர் க்ரைம் போலீஸார் மோப்பம் பிடித்தனர். இதன் அடிப்படையில் குஜராத்தின் சூரத்துக்கு விரைந்த மும்பை போலீஸார் தீபக் மலாகரை அதிரடியாக கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in