மாணவர்களிடம் சாதிரீதியாகப் பேச்சு: இரு ஆசிரியைகள் பணியிடை நீக்கம்

பணியிடை நீக்கம்
பணியிடை நீக்கம்

தூத்துக்குடியில் மாணவனிடம் சாதிரீதியாக பேசிய ஆசிரியைகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக மாணவனிடம் சாதி ரீதியாக உதவித் தலைமையாசிரியைப் பேசிய ஆடியோ வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் உள்ளது குளத்தூர். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கணித ஆசிரியையாகவும், உதவி தலைமையாசிரி யராகவும் கலைச்செல்வி என்பவர் உள்ளார். இந்த நிலையில், அதே பள்ளியில் படிக்கும் முனீஸ்வரன் என்னும் மாணவரிடம், கலைச்செல்வி பேசியதாக ஆடியோ ஒன்று அண்மையில் வெளியானது. அதில் ஆசிரியை கலைச்செல்வி சாதி ரீதியாகப் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியை கலைச்செல்வி. இது என் குரலே அல்ல. என் செல்போன் தொலைந்துவிட்டது. இது வேறு யாரோ பேசியது என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், இதுதொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி பாலதண்டாயுதம் நடத்திய விசாரணையில் இந்தப்பள்ளியில் கணினி ஆசிரியையாக இருக்கும் மீனா, கலைச்செல்வி ஆகியோர் சாதி ரீதியாக இயங்கியதும், தொடர்ந்து அப்படியே செயல்பட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in