போதையில் மோதல்... கார் உடைப்பு... தடுத்த போலீஸ்காரர் மீது வட மாநில தொழிலாளர்கள் தாக்குதல்!

போதையில் மோதல்... கார் உடைப்பு... தடுத்த போலீஸ்காரர் மீது வட மாநில தொழிலாளர்கள் தாக்குதல்!

ஆயுத பூஜை கொண்டாட்டத்தின் போது அம்பத்தூரில் வடமாநில தொழிலாளர்கள் போலீஸாரை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஆயுத பூஜை கொண்டாட்டத்தின் போது, மது போதையில் 200க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்த அப்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் நேரில் சென்று அவர்களை கண்டித்துள்ளனர். அப்போது வட மாநில தொழிலாளர்கள், காவலர் ரகுபதியை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. போலீஸார் வந்த இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த காவலர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத் தொழிலாளர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டது, தடுக்கச் சென்ற போலீஸார் மீது தாக்குதல் நடத்தியது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in