ஷாக்: ரவுடிகளை ஏவி தாக்குதல் நடத்திய அஜித் பட நடிகர் மீது அடுத்த வழக்கு!

விக்கி (எ) விக்னேஷ்
விக்கி (எ) விக்னேஷ்

அஜித்தின் ' துணிவு' படத்தில் நடித்த நடிகர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்கி (எ) விக்னேஷ்
விக்கி (எ) விக்னேஷ்

சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் என்.என் கார்டன் பகுதியில் கேஜிஎஃப் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருபவர் விக்கி (எ) விக்னேஷ். இருவருக்கு அதே பகுதியில் சொந்தமாக மூன்று கடைகள் உள்ளன. சமூக வலைத்தளங்களில் பிரபலமான விக்கி, சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபாரத்திற்காக சிறார்களை விக்கி கடையில் பணியில் அமர்த்தி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் குழந்தை தொழிலாளர் மாவட்ட தடுப்புக்குழு அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் மற்றும் வண்ணாரப்பேட்டை போலீஸார், விக்கிக்குச் சொந்தமான மூன்று கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் 18 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள் பணியில் இருந்தது தெரியவந்தது. அவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சொற்ப சம்பளத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

நால்வரில் ஒரு சிறுவன் மட்டும் தப்பியோடிவிட மற்ற மூவரையும் குழந்தைதள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து குழந்தை தொழிலாளர் மாவட்ட தடுப்புக்குழு அதிகாரிகள் அறிக்கை தயார் செய்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் 14‌ வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைப் பணியில் அமர்த்திய குற்றத்திற்காக துணிக்கடை உரிமையாளர் விக்னேஷ் மீது வண்ணாரப்பேட்டை போலீஸார் குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த விக்னேஷிற்கு போலீஸார் சம்மன் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே விக்னேஷ் வியாபார போட்டி காரணமாக ரவுடிகளை ஏவி, சக கடைஉரிமையாளரை தாக்கியதற்காக வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in