ஈரோட்டில் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்துறையினர் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம, முத்துக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும், பவானி காலிங்கராயன் பாளையத்தைச் சேர்ந்த யுத்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக யுத்தி தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.
திருமணத்தின் போது சீதனமாக பெண்ணின் பெற்றோர் 200 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி, 10 லட்சம் ரொக்கம், பிஎம்டபிள்யு கார் வாங்க 75 லட்ச ரூபாய் ஆகியவற்றை வழங்கி உள்ளனர்.
ஜவுளி தொழில் செய்து வந்த சந்தோஷ் குடும்பத்தினர் புதிய நிறுவனம் தொடங்குவதாக கூறி யுத்தியின் பெற்றோரிடம் ஒரு கோடி ரூபாய் பெற்று யுத்தியையும், சந்தோஷின் அண்ணன் மனைவி ஹரிநந்தினியையும் நிறுவன இயக்குநர்களாக நியமித்தனர்.
அதன் பிறகு விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சந்தோஷூக்கு பிரியங்கா என்பவருடன் இரண்டாவது திருமணம் நடந்து அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது யுத்திக்கு தெரிய வந்துள்ளது.
மேலும் தனது பெயரில் இருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவன பங்குகளை, சந்தோஷ் குடும்பத்தினர் போலியாக கையெழுத்திட்டு வேறொருவரின் பெயருக்கு மாற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த யுத்தி, நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். விசாரணை நடத்திய மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சந்தோஷ், சங்கீத், அவர்களது தாயார் தமிழ்செல்வி, தந்தை சுரேஷ், சங்கீத்தின் மனைவி ஹரிநந்தினி, சந்தோஷின் இரண்டாவது மனைவி பிரியங்கா ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குற்றவியல் சதி, ஏமாற்றுதல், போலி ஆவணம் தயாரித்தல், போலி ஆவணத்தை மோசடியாக பயன்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் என 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தலைமறைவான 6 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!
கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!
ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!