பரபரப்பு... சீமானை தேடும் போலீஸ்... சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திட்டம் தீட்டியதாக வழக்கு!
காவிரி விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் படங்கள் வெளியிட்டதாக சீமான், செல்வின் என்ற இருவர் மீது தமிழக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காவிரி விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று அறிக்கை மூலம் எச்சரிக்கை தெரிவித்திருந்தார்.
நேற்று அவரது எச்சரிக்கையை தொடர்ந்து இருவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு மாநில உறவுகளைக் குலைக்கும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தமிழக லாரி ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தை தற்போது நடந்தது போல மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சேர்ந்த சீமான், திருநெல்வேலியைச் சேர்ந்த செல்வின் ஆகியோர் சமூக வலைதளங்களில் படங்களை பதிவிட்டுள்ளனர்.

நாட்டின் இறையாண்மைக்கும் தேச ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படங்களை வெளியிட்ட அவர்கள் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களைத் தேடி வருவதாக தமிழக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.