கார் மீது நேருக்கு நேர் மோதிய பேருந்து; ஒரே குடும்பத்தில் 7 பேர் பலி - திருமணத்துக்குச் சென்றபோது சோகம்

விபத்து
விபத்து

ராஜஸ்தான் மாநிலம் பந்தாடி கிராமத்தில் நேற்று மாலை பேருந்து மற்றும் கார் நேருக்கு நேரு மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிகாரில் இருந்து கார் வந்து கொண்டிருந்தபோது, ​​பந்தாடி கிராமத்தின் டிட்ரி சௌராஹா என்ற இடத்தில் ஒரு திருப்பத்தில் பேருந்து மீது கார் மோதியுள்ளது. இதில் காரில் இருந்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் ஒரு குழந்தை உட்பட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் இறந்தவர்கள் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் சிகாரிலிருந்து நாகௌருக்கு ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்த போது இந்த கோர சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in