தோட்டத்தில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள்… தப்பியோடிய கணவர்: பலமடங்கு லாப ஆசையால் சிக்கிய மனைவி!

தோட்டத்தில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள்… தப்பியோடிய கணவர்: பலமடங்கு லாப ஆசையால் சிக்கிய மனைவி!

வாழைத் தோட்டத்தில் பயிரிடப்பட்ட கஞ்சா செடியைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், தலைமறைவான கஞ்சா வியாபாரி கோவிந்தராஜ் என்பவரைத் தேடிவருகின்றனர். மேலும் அவரின் மனைவி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருக்குச் சொந்தமான நிலத்தில் மனைவி ராதாவுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார். மேலும் இருவரும் ரகசியமாக கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வரும் தொழிலையும் நடத்தி வந்தனர். கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து விற்பதைவிட அதை விளைவித்து விற்பனை செய்தால் பலமடங்கு லாபம் பார்க்கலாம் என நினைத்த கோவிந்தராஜ், தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் கஞ்சா விதைகளை வாங்கி வந்தார். மேலும் தனது வாழைத் தோட்டத்தில் வாழை மரங்களுக்கு இடையே கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார். இதனால் வாழைத் தோட்டத்தில் யாரையும் அனுமதிக்காமலிருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அல்லேரி பகுதியில் கஞ்சா பயிரிடுவதாகத் திருவண்ணாமலை காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பள்ளி கொண்டா காவல் துறையினர் அப்பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது கோவிந்தன் என்பவரது வாழைத்தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பயிரிடப்பட்டிருந்த சுமார் நான்கு கிலோ எடை கொண்ட 68 கஞ்சா செடிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கோவிந்தராஜன் தப்பியோடிய நிலையில், அவரின் மனைவி ராதா என்பவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in