
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 40 வயது பெண் ஒருவர் பேருந்து ஓட்டுநரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஹர்மடா பகுதியைச் சேர்ந்த நாற்பது வயதான தனது மனைவியை காணவில்லை என்று கடந்த 16ம் தேதியன்று அந்தப் பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார். ஆனால் அவரது புகாரை பெற்றுக் கொள்ளாத போலீஸார் நன்கு தேடிப் பார்த்துவிட்டு மறுநாள் வரும்படி கூறியுள்ளனர்.
ஆனால் அன்று இரவு மறைவான ஓரிடத்தில் மயக்கமடைந்த நிலையில் அந்த பெண் கண்டறியப்பட்டார். இதையடுத்து 19ம் தேதி காலையில் பாஜக தொண்டர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து உடனடியாக பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த போலீஸார் குற்றம்சாட்டப்பட்ட பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரா என்பவரை கைது செய்துள்ளனர். காய்கறி வாங்குவதற்காக வெளியே சென்றிருந்த போது, குற்றவாளிகளால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பெண்ணின் குடும்பத்தினர் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
வித்யாதர் நகர் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டதாக ஆளும் காங்கிரஸ் அரசைக் குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இதேபோன்ற ஒரு சம்பவத்தில், கடந்த மாதம் ராஜஸ்தானின் தீத்வானா குச்சமன் மாவட்டத்தில் 32 வயது தலித் பெண் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பெண்ணை கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டதாக 3 ஆண்கள் கைது செய்யப்பட்டு ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஐந்து பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (டி) (கும்பல் பலாத்காரம்) மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!
துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!
1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!
ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?
பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?