அரசு பேருந்து மோதி அப்பளமாய் நொறுங்கிய கார்... 5 பேர் பலியான சோகம்!

கார் மீது மோதிய அரசு பேருந்து
கார் மீது மோதிய அரசு பேருந்து

கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து – கார் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கதக் மாவட்டம் நரேகல் புறநகரில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், எதிரே வந்த காரும் திடீரென நேருக்கும் நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் காரில் இருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த நரேகல் காவல்துறையினர், படுகாயம் அடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்பு பணி நடக்கிறது
மீட்பு பணி நடக்கிறது

உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பலியானவர்கள் மாதனஹிப்பரகி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் கட்டே (31), சிவக்குமார், சந்திரகலா, ராணி மற்றும் தாட்சாயிணி என தெரியவந்தது.

ஆலந்தாவில் இருந்து 9 பேரும் காரில் கஜேந்திர கடாவுக்கு வந்து, அங்கிருந்து சிரஹட்டியில் இருக்கும் பக்கீஷ்வரா மடத்திற்கும், சில கோயில்களுக்கும் சென்ற போது விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நரேகல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in