சாய்பாபா கோயில்
சாய்பாபா கோயில்

சென்னையில் அதிர்ச்சி! விழுந்த ராக்கெட் பட்டாசு... பற்றி எரிந்த சாய்பாபா கோயில்

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் ராக்கெட் பட்டாசு விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. கோயில் பற்றி எரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், பட்டாசு வெடித்து மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தநிலையில், சென்னை மயிலாப்பூரிலும் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டது. இதனிடையே, மயிலாப்பூரில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் நேற்று இரவு ராக்கெட் பட்டாசு விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து, கோயிலை சுற்றி ஓலைகள் கட்டப்பட்டு இருந்தது.

சாய்பாபா கோயில்
சாய்பாபா கோயில்

ஓலையில் தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து ஏற்பட்டு இருப்பதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயணைக்கப்பட்டது. கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in