சுட்டது யார்?... வழக்கறிஞர் வீட்டில் திடீரென பாய்ந்த துப்பாக்கித் தோட்டா!

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

சென்னை தாம்பரத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் திடீரென பாய்ந்த துப்பாக்கித் தோட்டாவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் மீனாம்பாள் தெருவில் வசிப்பவர் தியாகராஜன்(60). இவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை அவர் வீட்டில் இல்லாத போது பயங்கர சத்தத்துடன் அவரது வீட்டின் உட்புறக்கண்ணாடி திடீரென நொறுங்கி விழுந்தது.

அப்போது வீட்டில் இருந்த தியாகராஜனின் மனைவி பிரியா, மகன் விஷால் ஆகியோர் திடீரென கண்ணாடி எப்படி உடைந்தது எனப் பார்த்தனர். அப்போது அங்கு துப்பாக்கித் தோட்டா ஒன்று இருந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக தாம்பரம் காவல் நியைத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்களுடன் சென்ற போலீஸார், துப்பாக்கித் தோட்டாவைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில், 1 கி.மீ தொலையில் இருந்து துப்பாக்கித் தோட்டா வந்திருக்கலாம் என்று, விமானப்படை அலுவலர் குடியிருப்பு பகுதியில் இருந்து துப்பாக்கித் தோட்டா பாய்ந்ததா அல்லாது வேறு காரணமா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையர் பவன்குமார் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வீட்டின் மீது துப்பாக்கித் தோட்டா பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in