சீட்டுக் கட்டுப்போல சரிந்து விழுந்த இரண்டடுக்கு கட்டிடம்: தொடர்மழையால் மதுரையில் பயங்கரம்!

இடிந்து விழுந்த கட்டிடம்
இடிந்து விழுந்த கட்டிடம்
Updated on
1 min read

மதுரையில் தொடர் மழை காரணமாக இரண்டடுக்கு கட்டிடம் சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இரவு நேரத்தில் கட்டிடத்தில் யாரும் இல்லாததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மதுரை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில், மதுரை காக்காதோப்பு பகுதியில் உள்ள பழமையான இரண்டு அடுக்கு கட்டிடத்தின் மீது நேற்று நள்ளிரவில் பலத்த இடி விழுந்ததால் கட்டிடம் முழுவதும் சரிந்து விழுந்து விபத்திற்குள்ளனது.

நொறுங்கி விழுந்த வீடு
நொறுங்கி விழுந்த வீடு

இந்த விபத்தின் போது கட்டிடத்தில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கட்டிடம் இடைந்து விழுந்ததால், அங்கிருந்த மின்சார வயர்கள் சேதம் அடைந்து, அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த வருவாய் துறையினர் இடிபாடுகளை அகற்றிய நிலையில், மின்வாரியத்தினர் மின் இணைப்புகளை சீரமைத்தனர். தொடர் மழையால் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இடிந்து கிடக்கும் கட்டிடம்
இடிந்து கிடக்கும் கட்டிடம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in