நள்ளிரவில் அதிர்ச்சி! எல்லையில் துப்பாக்கிச்சூடு - பாதுகாப்பு படை வீரர் காயம்

எல்லையில் நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு
எல்லையில் நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் நேற்று இரவு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராம்கர் மற்றும் அர்னியா பகுதிகளில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் ராணுவத்தினர் சண்டை நிறுத்தத்திற்கு எதிராக திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.

எல்லை பாதுகாப்புப்படை வீரர் காயம்
எல்லை பாதுகாப்புப்படை வீரர் காயம்

துப்பாக்கி குண்டு பாய்ந்த அவரை உடனிருந்த வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். நள்ளிரவில் 2 மணி முதல் 2.30 மணி வரை இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உஷார் நிலையில் ராணுவம்
உஷார் நிலையில் ராணுவம்

எல்லையில் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இது போன்ற அத்துமீறிய தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள ராணுவம், எல்லையில் வீரர்கள் விழிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கொத்தோகாலன் பகுதியில் நடைபெற்ற அத்துமீறல் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்தனர். தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவரிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in