சத்தீஸ்கரில் அதிர்ச்சி! கையெறிகுண்டு வெடித்து பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு

கையெறிகுண்டு வெடித்து பி.எஸ்.எஃப் வீரர் பலி
கையெறிகுண்டு வெடித்து பி.எஸ்.எஃப் வீரர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரரிடம் இருந்த, கையெறிகுண்டு தவறுதலாக வெடித்ததில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை மற்றும் 17ம் தேதி என 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையமும், பாதுகாப்பு படையினரும் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நக்சல்கள் தாக்கம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, தீவிர ரோந்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கரில் தேர்தலை ஒட்டி தீவிர கண்காணிப்பு
சத்தீஸ்கரில் தேர்தலை ஒட்டி தீவிர கண்காணிப்பு

இந்நிலையில், தண்டேவாடா காவல் நிலையம் அருகே, நேற்று பாதுகாப்பு படையினர் ரோந்துப்பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் பையில் இருந்த கையெறிகுண்டு எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது. இதில் படுகாயமடைந்த அந்த வீரரை சக வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதும், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த வீரர், இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த பல்பீர் சந்த் என்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கையெறிகுண்டு வெடித்தது குறித்து விசாரணை
கையெறிகுண்டு வெடித்தது குறித்து விசாரணை

உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தால், தேர்தல் பாதுகாப்பு பணிகளில் தொய்வு ஏற்படவில்லை எனவும், பாதுகாப்பு படையினர் விழிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!

தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!

அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்

பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in