சமையல் செய்யும்போது அடுப்பில் சிறுநீர் கழித்த சிறுமி... கண்டித்த பெண்களுக்கு அடி உதை, கத்திக்குத்து!

தாக்கப்பட்ட பெண்கள்
தாக்கப்பட்ட பெண்கள்

சமையல் நடந்து கொண்டிருந்தபோது அடுப்பில் சிறுநீர் கழித்த பக்கத்து வீட்டுச் சிறுமியைக் கண்டித்த இரண்டு பெண்கள் சரமாரியாகத் தாக்கப்பட்டனர். அத்துடன் பெண்மணிக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் அளித்த புகார்.
பெண்கள் அளித்த புகார்.

உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தில் உள்ள அவுரையா நகரைச் சேர்ந்தவர்கள் ஷிவானி, ஜோதி. இவர்கள் இருவரும் திபியாபூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "ஷிவானி தனது வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டு சிறுமி அடுப்பில் சிறுநீர் கழித்துள்ளார். அந்த சிறுமியின் வீட்டில் போய் ஷிவானி சிறுமியின் செயல் குறித்து புகார் கூறியுள்ளார்.

கத்திக்குத்து
கத்திக்குத்து

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் ஷிவானியை சரமாரியாக தாக்கினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அவரது அத்தையான ஜோதி அங்கே சென்று தாக்குதலைத் தடுத்துள்ளார். அவரையும் அந்த கும்பல் தாக்கியதுடன், கத்தியால் குத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

இதுகுறித்து ஷிவானி கூறுகையில்," எனது சகோதரியை பக்கத்து வீட்டாரின் மைத்துனர் திருமணம் செய்ய விரும்பினார். அது நடக்கவில்லை. அதனால் அவர்கள் அவ்வப்போது எங்களை இதுபோல அடிக்கடி துன்புறுத்துகிறார்கள்" என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in