‘வெளியே சொன்னால் வீடியோவை வெளியிடுவோம்’ : பெண்ணை வன்கொடுமை செய்த அண்ணன், தம்பி கைது

‘வெளியே சொன்னால் வீடியோவை வெளியிடுவோம்’ : பெண்ணை வன்கொடுமை செய்த அண்ணன், தம்பி கைது

இளம்பெண்ணை கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய அண்ணன், தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மும்பை வில்லே பார்லே பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் அனில் சோகன், நிலேஷ் சோகன். இவர்கள் இருவரும் தாராவியில் வசித்து வந்தனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணிடம் அண்ணன், தம்பி இருவரும் நட்பாக பழகியுள்ளனர்.

இந்த நிலையில் வீட்டில் அந்த பெண் மட்டும் தனியாக இருப்பதை அறிந்த அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும் இதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால், ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன இளம்பெண் சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லவில்லை.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அண்ணன், தம்பி இருவரும் மீண்டும் இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்தனர். இதனால், நடந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் அப்பெண் கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மும்பை வில்லே பார்லேவில் பதுங்கியிருந்த அனில் சோகன், நிலேஷ் சோகனை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in