எவ்வளவு கேட்டும் தரலை... அண்ணனைத் தீர்த்து கட்டிய தம்பி!

கைது செய்யப்பட்ட பழனிச்சாமி
கைது செய்யப்பட்ட பழனிச்சாமி
Updated on
1 min read

பல முறை கேட்டும், சொத்தை பிரித்து தராத ஆத்திரத்தில் அண்ணனை கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கொண்டரசம்பாளையம் பகுதியில் வசிப்பவர் பழனிசாமி. இவரது தம்பி ஈஸ்வரமூர்த்தி. இவர்கள் தங்களுக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் தனித்தனியே வீடுகளைக் கட்டி வசித்து வந்தனர். பழனிசாமி திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஈஸ்வரமூர்த்திக்கு திருமணம் ஆகி முத்துலட்சுமி (45) என்ற மனைவியும், இளங்கவி என்ற மகனும், வாணிஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் பழனிசாமி தனது அண்ணன் ஈஸ்வரமூர்த்தியிடம், தனக்குரிய சொத்தை பிரித்துக் கொடுக்குமாறு பலமுறை கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

ஆனால் ஈஸ்வரமூர்த்தி, பழனிசாமிக்கு உண்டான பங்கை பிரித்து தராமல், அவருக்கு தேவைப்படும் போது மட்டும் பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. சொத்தை பிரித்து தராத ஆத்திரத்தில் இருந்து வந்த பழனிசாமி, ஈஸ்வரமூர்த்தியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு ஈஸ்வரமூர்த்தி தனது வீட்டில் மாடுகளிடம் பால் கறந்து அதனை மொபட்டில் எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார். தோட்டத்தில் இருந்து வெளியே வந்த போது அங்கு ஏற்கனவே அரிவாளுடன் காத்திருந்த பழனிசாமி, ஈஸ்வரமூர்த்தியின் தலையில் இரும்பு கம்பியால் பலமாக தாக்கினார்.

இதில் மொபட்டுடன் தடுமாறி கீழே விழுந்த ஈஸ்வரமூர்த்தியை, பழனிசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் ஈஸ்வர மூர்த்தியின் உடலை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பழனி சாமி சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், சொத்து தகராறின் காரணமாக அண்ணனை வெட்டிக் கொன்றதாகவும் தெரிய வந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பழனிசாமியும், ஈஸ்வரமூர்த்தியும் சேர்ந்து ஏற்கனவே அதே பகுதியில் அண்ணன், தம்பி 2 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in