சொத்து தகராறில் சொந்த அண்ணனையே கடத்திய அதிமுக பெண் பிரமுகர்!

கணவர், மகன்கள் உட்பட 4 பேர் கைது
வத்சலா
வத்சலா

சென்னை:

சொத்து தகராறில் சொந்த அண்ணனையே கடத்திய, கொளத்தூர் பகுதி அதிமுக வட்டச் செயலாளரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பூர், தீட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தமன் (50). இவர், தனது அம்மாவுக்குச் சொந்தமான வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகிறார். இவரது அம்மா, அந்த வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வருகிறா. புருஷோத்தமனுக்கும் அவரது தங்கையும், அதிமுக கொளத்தூர் பகுதி 68-வது வட்டச் செயலாளருமான வத்சலா (46) என்பவருக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த வருடம் வத்சலா தனது அண்ணனுக்கு தெரியாமல் அவர் வசிக்கும் வீட்டில் காலியாக உள்ள அறையில், தனக்கு தெரிந்த நபர் ஒருவரை வாடகைக்கு குடியமர்த்தினார். பிறகு, அந்த நபரை அங்கிருந்து அனுப்பிவிட்டு தானே தனது குடும்பத்துடன் அந்த அறையை ஆக்கிரமித்தார்.

இதையடுத்து, தங்கையை வீட்டைவிட்டு வெளியேற்றுவது தொடர்பாக புருஷோத்தமனுக்கும் வத்சலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. புருஷோத்தமன் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், கடந்த 5-ம் தேதி புருஷோத்தமனை வேப்பேரி ரித்தர்டன் சாலை சந்திப்பில் வைத்து அடித்து உதைத்த வத்சலாவும் அவரது குடும்பத்தினரும் அவரை காரில் கடத்திச் சென்றனர்.

அதன் பிறகு புருஷோத்தமனுக்கு என்ன ஆனது என்று தெரியாதிருந்த நிலையில், ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிவந்த புருஷோத்தமன், நேற்று இதுகுறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், வேப்பேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

லோகநாதன்
லோகநாதன்

இந்த வழக்கில் வத்சலா மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவரது கணவர் லோகநாதன் (50), கடல்வள ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வரும் மகன் ஜெயராம் (21), தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் மற்றொரு மகன் ருத்ரன் (21) உட்பட 4 பேரை இன்று கைது செய்த போலீஸார், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in