40 நாய்கள் சாகும் வரை பலாத்காரம்... வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றம்... பகீரிடச் செய்யும் ‘முதலை’ மனிதன் வாக்குமூலம்!

குட்டி முதலை உடன் ஆடம் பிரிட்டன்
குட்டி முதலை உடன் ஆடம் பிரிட்டன்

40க்கும் மேற்பட்ட நாய்களை சாகும் வரை பலாத்காரம் செய்து அவை தொடர்பான வீடியோக்களை டார்க் இன்டர்நெட்டில் பதிவேற்றிய பிரிட்டன் நபர், ஆஸ்திரேலியாவை அலறச் செய்திருக்கிறார்.

51 வயதாகும் ஆடம் பிரிட்டன் பிபிசி மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் ஆகியவற்றின் தயாரிப்புகளில் பணியாற்றிய விலங்கியல் நிபுணர் ஆவார். வட ஆஸ்திரேலியாவில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் கல்விப் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். முதலைகளை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் ’முதலை’ மனிதர் என்றும் பரவலாக அறியப்படுகிறார்.

ஆனால் எவரும் அறியாத இன்னொரு முகம் அவருக்கு உண்டு. விலங்குகளை அதிலும் குறிப்பாக நாய்களை குறிவைத்து பலாத்காரம் செய்ததும், அவை தொடர்பான வீடியோக்களை இருள் இணையத்திலும் பதிவேற்றியதுமாக பகீரிடச் செய்திருக்கிறார் ஆடம் பிரிட்டன். வடக்கு ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் 56 விலங்குகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் வீடியோக்களை பரப்பியதாக 4 குற்றங்கள் ஆகியவற்றை ஆடம் பிரிட்டன் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

நாய்
நாய்

விலங்குகளை பலாத்காரம் செய்து அதன் மூலமாக துன்புறுத்தி இன்பம் காண்பவராக அவர் அறியப்பட்டதில், விசாரணை நீதிமன்றமே வெலவெலத்துப் போயிருக்கிறது. இதனால் தலைமை நீதிபதி மைக்கேல் கிராண்ட், வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்க ஆரம்பித்ததும், பலமுறை பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை நீதிமன்றத்தின் கூடத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

பிரிட்டனில் பிறந்து 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஆடம் பிரிட்டன், 2014 முதல் தனது கோர நடவடிக்கைகளை அங்கு அரங்கேற்றி வந்திருக்கிறார். நாய்கள் மீது தனி மோகம் கொண்ட இவர், இதற்கென ’டார்ச்சர் ரூம்’ என பிரத்யேக அறையை வடிவமைத்து அதில் நாய்களை பலாத்காரம் மற்றும் சித்ரவதை செய்து கொன்றிருக்கிறார். தனது முகத்தை மறைத்தபடி அவற்றை வீடியோக்கள் எடுத்து இருள் இணையத்தில் கடைபரப்பி இருக்கிறார். இவரைப் போன்று உலகம் முழுமைக்கும் ஒளிந்திருக்கும் சேடிஸ்டுகளை டெலகிராம் குழு ஒன்றின் வாயிலாகவும் ஒருங்கிணைத்திருக்கிறார்.

ஆடம் பிரிட்டன் மற்றும் நாய்கள்
ஆடம் பிரிட்டன் மற்றும் நாய்கள்

வீடுகளில் வளர்க்கப்படும் செழிப்பான நாய்கள் தன்னைத் தேடிவர, தனியாக இணையத்தில் பொறி வைத்திருக்கிறார். வெகுதொலைவுக்கு வீடுகள் குடிமாறும்போது தாங்கள் வளர்க்கும் நாய்களை அங்கு கொண்டு செல்ல முடியாதவர்களுக்கு என தனியாக பராமரிப்பு மையத்தை செயல்படுத்துவதாக இணையத்தில் தூண்டில் போட்டார். அப்படி வந்த நாய்களை பாலியல் சித்ரவதை செய்து கொன்றார். அந்த நாய்களின் பழைய புகைப்படங்களை உரிமையாளர்களுக்கு அனுப்பி வைத்து, ஏமாற்றியும் வந்திருக்கிறார்.

உலகமறிந்த விலங்கு நிபுணராக ஆடம் பிரிட்டன் விளங்குவதால் அவர் மீது எவருக்கும் சந்தேகம் எழவில்லை. ஆனபோதும், பெண் ஒருவர் ஆடம் பிரிட்டனின் ஐயத்துக்குரிய நடவடிக்கைகள் தொடர்பாக அளித்த புகாரில், கடந்தாண்டு ஏப்ரலில் ஆடம் கைது செய்யப்பட்டார். தன் மீதான குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டதில் ஆடம் பிரிட்டனுக்கு எதிரான வழக்கு தற்போது வேகமெடுத்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in