வீலிங் யுவதி
வீலிங் யுவதி

‘கேர்ள்ஸ் மட்டும் வீலிங் செய்யலாமா போலீஸ்கார்?’ இணையத்தில் குமுறும் இளைஞர்கள்

Published on

வீலிங் செய்யும் இளம்பெண்களின் வீடியோவை பதிவிட்டு, ’சட்டம் தனது கடமையை செய்யுமா அல்லது பெண்கள் என்பதற்காக கரிசனம் காட்டுமா’ என இளைஞர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

தமிழக இளைஞர்கள் மத்தியில் வீலிங் என்ற பெயரில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பைக் சாகசங்கள் மேற்கொள்வோர் அதிகரித்து வருகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாகவும், பாதசாரிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும் அரங்கேறும் இந்த போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக போலீஸார் சாட்டை சுழற்ற ஆரம்பித்துள்ளனர்.

ஆண் - பெண் வீலிங்ஃப்
ஆண் - பெண் வீலிங்ஃப்

டிடிஎஃப் வாசன் முதல் திருச்சியில் சாகச தீபாவளி கொண்டாடிய இளைஞர்கள் வரை, பலரின் ஓட்டுநர் உரிமத்தை போலீஸார் ரத்து செய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎஃப் வாசன், பிணையில் வெளிவந்து அடக்கி வாசிக்கிறார். அவரை அடியொற்றிய பைக் சாகச இளைஞர்கள் பலரும் வீலிங் கனவுகளை கனத்த இதயத்துடன் கலைத்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் பதிவிட்ட தங்களது பைக் சாகச வீடியோக்களை, போலீஸார் பார்வையில் படும் முன்னர் நீக்கி வருகின்றனர்.

மேற்கண்ட ஆதங்கத்தில் இந்த இளைஞர்களின் கோபம் சகவயதினரான இளம்பெண்கள் மீது திரும்பியிருக்கிறது. யுவதிகள் சிலர் அதிநவீன பைக்குகளை ஆரோகணித்து, சாகசங்கள் மேற்கொள்வதை கண்டு கொதிப்பில் ஆழ்ந்துள்ளனர். அப்படியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ’இவங்க மட்டும் வீலிங் செய்யலாமா போலீஸ்கார்?’ என்று காவல்துறை நடவடிக்கையை கோரி வருகின்றனர்.

அந்தப் பதிவுகளில் ஆஜராகி, தங்கள் வீலிங் கனவுகள் கலைக்கப்பட்டது குறித்தும், அதனை பெண்கள் மட்டும் செயல்படுத்துவது குறித்தும் இளைஞர்கள் தங்கள் ஆதங்கங்களை பதிவு செய்து வருகின்றனர். ’சட்டம் தனது கடமையை செய்யுமா அல்லது கரிசனம் காட்டுமா’, ’பெண் என்பதால் எச்சரிக்கையோடு விட்டுவிடுவார்கள்; இதுவே ஆண்கள் என்றால் ஓட்டுநர் உரிமத்தை பறித்து சிறையில் தள்ளுவார்கள்; வாகனத்தை எரிக்கச் சொல்வார்கள்’ என்றெல்லாம் பொங்கி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் கமல் பன்றியை வளர்கிறார்... பிரபல பாடகி ஆவேசம்!

சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!

பகீர் வீடியோ... 40 தொழிலாளர்களின் உயிர் போராட்டம்... மீட்பு பணிகள் நிறுத்தி வைப்பு!

நாளை உலகக் கோப்பை பைனல்... லட்சங்களில் எகிறிய தங்கும் விடுதி வாடகை!

பரபரப்பு... காங்கிரஸ் வேட்பாளருக்கு விழுந்த செருப்படி!

x
காமதேனு
kamadenu.hindutamil.in