'ஜெய் ஸ்ரீ ராம்' என்று அச்சிடப்பட்ட தாவணி தீவைத்து எரிப்பு: 2 பள்ளிச் சிறுவர்கள் மீது வழக்கு!

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

'ஜெய் ஸ்ரீராம்' என அச்சிடப்பட்ட தாவணியை தீ வைத்து எரித்த 2 பள்ளிச் சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் சிறுவன், 'ஜெய் ஸ்ரீ ராம்' மற்றும் 'ஓம்' என அச்சிடப்பட்ட தாவணியை தீவைத்து எரித்து மிதிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் 11-ம் வகுப்பு படிக்கும் சிறுவன், தாவணியை எரிப்பதும், மற்றொரு இளைஞன் அந்தச் செயலைப் பதிவு செய்வதும் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதுத் தொடர்ந்து கோரவால் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் 11 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் என்றும் சோன்பத்ராவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியில் “ஜெய் ஸ்ரீராம்“ கோஷங்களை எழுப்பியதாகக் கூறி 11-ம் வகுப்பு மாணவர் அவரது ஆசிரியரால் தாக்கப்பட்டார். மற்றொரு சம்பவத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில், வகுப்பறையின் கரும்பலகையில் “ஜெய் ஸ்ரீராம்“ என்று எழுதியதற்காக 10-ம் வகுப்பு மாணவனை அடித்த அரசுப் பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in