அதிர்ச்சி; பொறியியல் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்துக் கொலை: காதல் தகராறில் வாலிபர் வெறிச்செயல்!

சுசித்ரா.
சுசித்ரா.

கர்நாடகாவில் காதல் தகராறில் பொறியியல் கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் ஹோசஹள்ளியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தவர் சுசித்ரா(20). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த சுசித்ராவின் தந்தை பெங்களூருவில், ஓட்டுநராகவும், அவரது தாய் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையிலும் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுசித்ரா படிக்கும் கல்லூரியில் படித்தவர் முன்னாள் மாணவரான தேஜாஸ்(23). இவர் சுசித்ராவை காதலித்து வந்துள்ளார்.

காதல்
காதல்

ஆனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதாகக் கூறி, சுசித்ராவை நகரத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குந்தி பெட்டா மலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் தேஜாஸ் நேற்று அழைத்துச் சென்றார். அங்கு வந்த பிறகு, இருவரும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட தேஜாஸ்
கைது செய்யப்பட்ட தேஜாஸ்

இதனால் அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் சுசித்ரா கழுத்தை தேஜாஸ் அறுத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பினார். அப்பகுதியில் உள்ள சிலர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுசித்ராவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், சுசித்ரா உடலை மீட்டதுடன், தேஜாஸை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை
கொலை

போலீஸார் நடத்திய விசாரணையில், தேஜாஸ், சுசித்ரா கடந்த 6 மாதங்களாக பழகியதுடன், காதலித்து வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுசித்ராவுடன் தேஜாஸ் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். இதனால் அவரைப் பிரிய சுசித்ரா முடிவு செய்தார். அதையறிந்த தேஜாஸ், சுசித்ராவை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஹாசன் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in