அதிர்ச்சி: வீடு இடிந்து விழுந்து குடும்பமே புதைந்த சோகம்!

இடிந்து விழுந்த வீடு.
இடிந்து விழுந்த வீடு.
Updated on
2 min read

ஹரியாணாவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குடும்பமே இடிபாடுகளுக்குள் புதைந்தது. இதில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்னால் ரயில் நிலையம்
கர்னால் ரயில் நிலையம்Picasa

ஹரியாணா மாநிலம், கர்னாலைச் சேர்ந்தவர் ராம்தாஸ். அவரது மனைவி கமலேஷ். இவர்களுக்கு மனிஷா(13), ராஷி(7) என்ற மகள்களும், ஹிருத்திக்(5) என்ற மகனும் இருந்தனர். ராம்தாஸ், அவரது மனைவி கமலேஷ் கூலித்தொழிலாளிகள் ஆவர். வேறு மாநிலத்தில் நெல் அறுவடைப் பணிக்கு ராமதாஸ் சென்றிருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 6 மணியளவில் ராம்தாஸின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ராம்தாஸின் மனைவி மற்றும் குழந்தைகள் இடிபாடுகளுக்குள் புதைந்து போயினர். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தாய் மற்றும் மூன்று குழந்தைகளை மீட்டு கர்னாலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஹிருத்திக் பலியானார். இதில் கமலேஷ் மற்றும் மனிஷா, ராஷி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து கர்னாலைச் சேர்ந்த குர்ஜித் கூறுகையில்," இன்று காலை வெடிச்சத்தம் போல கேட்டது. வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது ராம்தாஸின் வீட்டின் மேற்கூரை இடிந்து வீடு புதைந்து போனது. இதில் சிக்கியிருந்த நான்கு பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால், ராம்தாஸின் ஒரே மகனான ஹிருத்திக் உயிரிழந்து விட்டார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம்
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம்

இந்த சம்பவம் குறித்து கிராமத்தினர் கூறுகையில்," ராமதாஸின் வீடு நீண்ட நாட்களாக பாழடைந்த நிலையில் உள்ளது. இதனால் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டை பழுது நீக்க பல முறை ராம்தாஸ் விண்ணப்பித்தார். ஆனால், மானியம் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்திருந்தால் ஒரு உயிர் பறிபோயிருக்காது" என்றனர். வீடு இடிந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in