ஒரே பெண்ணை காதலித்ததால் விபரீதம்- நண்பரை கொன்று உடலை காவல் நிலையம் தூக்கிச்சென்ற இளைஞர்!

ஸ்வப்னில், வேதாந்த் ராஜா
ஸ்வப்னில், வேதாந்த் ராஜா
Updated on
1 min read

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் வேதாந்த் ராஜா, 18 வயதாகும் இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை நியூசிலாந்தில் தொழிலதிபராக உள்ளார். ராஜாவின் நண்பர் ஸ்வப்னில் பிரஜாபதி 22 வயதான இவர் கல்லூரி முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இவரது தந்தை ஹஸ்முக் பிரஜாபதி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள சோலா காவல் நிலையம் வந்த வேதாந்த் ராஜா, வெளியே நிற்கும் காரில் தனது நண்பரின் உடல் இருப்பதாகவும், அவரை பலமுறை கத்தியால் குத்தி கொன்று விட்டதாகவும் தெரிவித்தார். இதனால், அதிர்ந்து போன போலீஸார், உடனடியாக காரில் சென்று பார்த்தபோது, அதில் ஸ்வப்னில் ரத்த வெள்ளத்தில் சடமாக கிடப்பதை கண்டனர். உடனடியாக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அவர்கள், ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், இருவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதன் காரணமாக இருவருக்கும் இடையில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை ஸ்வப்னிலுக்கு போன் செய்து அழைத்த ராஜா, விஸ்வர்கர்மா மேம்பாலம் அருகே வரவழைத்து கொன்றது தெரியவந்தது. தான் காதலித்த பெண்ணையே நண்பரும் காதலித்ததால் ஆத்திரமடைந்த இளைஞரின் செயல் அகமதாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in