வந்தவாசி அரசு மருத்துவமனை
வந்தவாசி அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி... கழிவுநீர் தொட்டியின் மீது கிடந்த பச்சிளம் சிசு!

திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனை பின்புறம் கழிவு நீர் தொட்டி மீது குழந்தையை வீசி விட்டு சென்றது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு உதவியாளராக பணியாற்றும் இளையராஜா என்பவர், தண்ணீர் நிரப்பும் மோட்டாரை போடுவதற்காக மாடிக்கு சென்றுள்ளார். அப்போது கீழே மூடப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டியின் மீது ஏதோ அசைவதை கண்ட அவர் கீழே இறங்கி வந்து பார்த்துள்ளார். அப்போது மூடப்பட்டிருந்த கழிவு நீர் தொட்டியின் மீது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் பச்சிளம் குழந்தை ஒன்று கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பச்சிளம் குழந்தையை கழிவுநீர் தொட்டி மீது விட்டுச்சென்ற அவலம்
பச்சிளம் குழந்தையை கழிவுநீர் தொட்டி மீது விட்டுச்சென்ற அவலம்

இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீஸார், தவறான உறவில் பிறந்த குழந்தை என்பதால் விட்டுச் சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தைக்கு தீவிர சிகிச்சை
குழந்தைக்கு தீவிர சிகிச்சை
x
காமதேனு
kamadenu.hindutamil.in