பரபரப்பு... விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அவரசமாக இறக்கி விடப்பட்ட பயணிகள்!

பரபரப்பு... விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அவரசமாக இறக்கி விடப்பட்ட பயணிகள்!

இன்று காலை பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டதாகவும், மேலும் ஆய்வுக்காக விமானம் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை கொச்சி விமான நிலையத்தில் இருந்து 6E6482 என்ற இண்டிகோ விமானம் ஒன்று பெங்களூருவுக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், போது, விமானதிற்குள் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி அழைப்பு வந்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை உறுதி செய்த நெடுவாசல் போலீஸார், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டு, விமானம் முழுவதும் அந்த குழு ஆய்வு செய்துள்ளது. இந்த மிரட்டல் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் 18 அன்று டெல்லி-புனே (விஸ்தாரா ஏர்லைன்ஸ்) டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததால், அந்த விமானம் புறப்பட 8 மணி நேரம் தாமதமானது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in