பகீர்...'பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும்'... மின்னஞ்சலால் பரபரப்பு!

லால் பகதூர் சாஸ்திரி பள்ளி
லால் பகதூர் சாஸ்திரி பள்ளி

டெல்லியில் உள்ள பள்ளியின் வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் வந்த தகவலால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி செக்டார் 3 ஆர்.கே.புரத்தில் லால் பகதூர் சாஸ்திரி பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடிக்கும் என்று ஒரு மின்னஞ்சல்வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பள்ளி முழுவதும் சோதனையிட்டனர். மின்னஞ்சலில் கூறியபடி பள்ளி வளாகம் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிரமாக சோதனையிட்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மின்னஞ்சலில் வந்தது புரளி என்று தெரிய வந்தது.

இன்றைய தினம் பள்ளியில் ஒரு தேர்வு நடைபெற இருந்தது. அதில் 400 மாணவர்கள் தேர்வு எழுத வேண்டியிருந்தது. வெடிகுண்டு மிரட்டலால். பள்ளியில் போலீஸார் முழுமையான சோதனை நடைபெற்ற பின்பே தேர்வு நடத்தப்பட்டது.

தொலைபேசி மூலம் மிரட்டல்
தொலைபேசி மூலம் மிரட்டல்

தேசிய தலைநகரான டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு மே மாதம் மதுரா சாலையில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கடிதம் வந்தது. நீண்ட நேர சோதனைக்குப் பின் அது புரளி என்பது தெரிய வந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் சாதிக் நகரில் உள்ள இந்தியன் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் தபால் மூலம் வந்தது. அதற்கு முன்பு 2022 பள்ளிக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இந்த மிரட்டல்கள் புரளி என்று பின்னர் தெரிய வந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in