அதிர்ச்சி... கர்நாடகா துறைமுகத்தில் கடும் தீ விபத்து; படகுகள் எரிந்து நாசம்!

தீயில் எரியும் படகுகள்
தீயில் எரியும் படகுகள்

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள கங்கொலி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 படகுகள், 2 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் உள்ள கங்கொலி துறைமுகத்தில் இன்று காலையில் மீனவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர்.   அப்போது எதிர்பாராத விதமாக   தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு படகில்  இருந்து மற்ற படங்களுக்கும் தீ மளமளவென பரவியது. இதுகுறித்த  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

மீனவர்களின் வழிபாட்டின்போது பட்டாசுகள் வெடித்து  இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகப்படுவதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதற்கான காரணம் குறித்து  இன்னும்  முழுமையாக தெரியவில்லை. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தீ
தீ

தற்போது தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விபத்தில்  11 படகுகள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாகவும்,  அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் தீயில் எரிந்து கருகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!

ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!

பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in