அதிர்ச்சி... காவல் நிலையம் அருகே பாஜக தலைவர் சுட்டுக்கொலை!

சுட்டுக்கொலை செய்யப்பட்ட சிவாஜி திவாரி மற்றும் சோகத்தில் அவரது குடும்பத்தினர்
சுட்டுக்கொலை செய்யப்பட்ட சிவாஜி திவாரி மற்றும் சோகத்தில் அவரது குடும்பத்தினர்

பீகாரில் காவல் நிலையம் அருகே பாஜக தலைவர் சிவாஜி திவாரி மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், சீவான் மாவட்டம் ராம்நகரைச் சேர்ந்தவர் சிவாஜி திவாரி. இவர் ராம்நகர் வார்டு பாஜக தலைவராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், இவர் தனது மைத்துனர் பிரதீப் பாண்டேவுடன் பைக்கில் நேற்று நள்ளிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

மர்மநபர்களால் சுடப்பட்டுக் கிடக்கும் சிவாஜி திவாரி.
மர்மநபர்களால் சுடப்பட்டுக் கிடக்கும் சிவாஜி திவாரி.

நகர் காவல் நிலையம் அருகே அவர் வந்த போது, ராம்நகர் ரயில்வே மேம்பாலம் அருகே பதுங்கியிருந்த மர்மநபர்கள், சிவாஜி திவாரியை நோக்கி சுட்டனர். இதில் அவர் மீதும், அவரது மைத்துனர் மீதும் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிவாஜி திவாரி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த அவரது மைத்துனர் பிரதீப் பாண்டே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக்கொலை தொடர்பாக சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். அத்துடன் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக காவல் துறை அதிகாரி ஃபிரோஸ் ஆலம் தெரிவித்தார்.

ஆகஸ்ட் முதல் தற்போது வரை சிவாஜி திவாரியின் குடும்பத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவாஜி திவாரியின் மைத்துனர் புவன் திவாரி ஆக.1-ம் தேதி இறந்தார். செப்.3-ம் தேதி சிவாஜி திவாரியின் சகோதரர் ராம் அயோத்தியின் மனைவி பினா தேவி உயிரிழந்தார். செப்.8-ம் தேதி உயிரிழந்த புவன் திவாரியின் மனைவி பாதாமி தேவி காலமானார்.

இதையொட்டி சிவாஜி திவாரியின் வீட்டில் மதநிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர் நேற்று நள்ளிரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in