பாஜக பிரமுகரின் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் உள்ள ஈச்சம்பட்டி கிராமம், சஞ்சய் காந்தி, தெருவை சேர்ந்தவர் தனபால்(50). பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும், முன்னாள் மாவட்ட செயலாளராகவும் இருந்தார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் முன் பகுதியில் உள்ள போர்டிகோவில் தனது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் தூங்கி விட்டார்.
இந்நிலையில், தனபால் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் நள்ளிரவு நேரத்தில் திடீரென தீ பற்றி எரிவதை கண்ட எதிர் வீட்டில் வசிக்கும் வரதராஜ்(40), என்பவர் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு தனபால் கதவை திறக்க முயற்சித்த போது, கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவை திறந்துவிட்டதோடு, தனபாலுடன் சேர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து, பெரம்பலூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும், இருசக்கர வாகனம் எதனால் எரிக்கப்பட்டது? முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் நள்ளிரவு நேரத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம், அக்கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாது, ஈச்சம்பட்டி கிராமத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!
தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!
ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!
பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!
அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!