`நிர்மலா சீதாராமன் அப்படி சொல்லவே இல்லை; இது போலி கார்டு'

`நிர்மலா சீதாராமன் அப்படி சொல்லவே இல்லை; இது போலி கார்டு'

நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை ஆணையரிடம் பாஜக புகார்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதுபோல் போலி டிஜிட்டல் கார்டை பரப்பியவர்கள் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு புகார் அளித்துள்ளது.

பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் பால்கனகராஜ் தலைமையிலான வழக்கறிஞர்கள் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால்கனகராஜ், "பொதுமக்களுக்கு எதிரான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததுபோல் போலியான தனியார் தொலைக்காட்சி டிஜிட்டல் கார்டை சில விஷமிகள் உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இது வேண்டுமென்றே பாஜக மற்றும் பிரதமர் மோடியின் பெயரை கெடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த போலியான தகவலை உருவாக்கியது யார்? அவர்களின் நோக்கம் என்ன? யாருடைய பின்புலத்தில் இது உருவாக்கப்பட்டது என்பதை கண்டறிந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் தொகுப்பு குறித்து போலியான டிஜிட்டல் கார்டை பரப்பியதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி.செல்வகுமார் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரிக்காமல் பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார். நிர்மல் குமார் போலியான ட்வீட்டை பரப்பி அதன் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்துள்ளார். அதில் தவறு ஒன்றும் இல்லை" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in