பஸ்சுக்காக காத்திருந்த மாணவி.. கடத்திய பைக் வாலிபர்: அதிரடியாக மீட்ட பொதுமக்கள்!

பஸ்சுக்காக காத்திருந்த மாணவி.. கடத்திய பைக் வாலிபர்: அதிரடியாக மீட்ட பொதுமக்கள்!

தேர்வு எழுதச் செல்ல பேருந்துக்காக காத்திருந்த மாணவியை டூவீலரில் கடத்த முயன்ற வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அடுத்த குருவன்கோட்டையைச் சேர்ந்த மாணவி நல்லூர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளியில் தேர்வு எழுதச் செல்வதற்காக பேருந்துக்காக ஆலங்குளம் மார்க்கெட் அருகே காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், மாணவியிடம் தேர்வு மையத்திற்கு அழைத்து செல்வதாக நைசாக பேசியுள்ளார். அதை நம்பி மாணவியும் வாலிபரின் டூவீலரில் ஏறியுள்ளார்.

ஆனால், டூவீலரை அந்த வாலிபர் பள்ளி நோக்கிச் செல்லாமல் புதுப்பட்டி சாலை பக்கம் திருப்பியதால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த பொதுமக்கள் டூவீலரை மடக்கினர். இதனால் டூவீலரை போட்டு விட்டு அந்த வாலிபர் தப்பியோடி விட்டார். இதையடுத்து மாணவியின் பெற்றோரை வரவழைத்து அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்தனர். மாணவியை கடத்த முயன்ற வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in