சிகிச்சை பெற வந்த ரவுடியை அடித்துக் கொன்ற டாக்டர்… மருத்துவமனைக்கு தீ வைப்பு!

சிகிச்சை பெற வந்த ரவுடியை அடித்துக் கொன்ற டாக்டர்… மருத்துவமனைக்கு தீ வைப்பு!

பீகாரில் சிகிச்சை பெற வந்த ரவுடியை மருத்துவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெகுசாராய் மாவட்டம் ரூப்நகரைச் சேர்ந்த சந்தன்குமார் என்ற ரவுடிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து,  நேற்று அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் அஜித் பஸ்வான் என்ற மருத்துவர் பணியில் இருந்தார்.

இந்நிலையில், ரவுடி சந்தன்குமாருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் அஜித் பஸ்வான் மறுத்ததாக தெரிகிறது. ஆத்திரம் அடைந்த ரவுடி சந்தன்குமார், மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து மருத்துவரும், ரவுடியும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர், மருத்துவருடன் சேர்ந்து ரவுடியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இருவரும் தாக்குதல் நடத்தியதை அடுத்து படுகாயம் அடைந்த ரவுடி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஆத்திரம் அடைந்த ரவுடி சந்தன்குமாரின் கூட்டாளிகள், கும்பலாக சென்று மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி, மருத்துவமனைக்கும், அருகில் உள்ள குடிசைகளுக்கும் தீ வைத்தனர்.

தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து உயிரிழந்த ரவுடி சந்தன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது கூட்டாளிகள் 6 பேரை கைது செய்தனர்.

மேலும், ரவுடியை அடித்துக்கொன்றுவிட்டு தலைமறைவான மருத்துவர் அஜித் பாஸ்வான், மருத்துவமனை ஊழியர் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். ரவுடி சந்தன்குமார், கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டதாக அவரது கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in