பிக் பாஸ் டைட்டில் வின்னர் கைது... நள்ளிரவில் பாரில் நடந்தது என்ன?

 பிக் பாஸ்  டைட்டில் வின்னர் நடிகர் முனவர் ஃபரூக்கி
பிக் பாஸ் டைட்டில் வின்னர் நடிகர் முனவர் ஃபரூக்கி

மும்பையில் உள்ள ஹூக்கா பாரில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்தி பிக் பாஸ் சீசன் 17 டைட்டில் வின்னர் நடிகர் முனவர் ஃபரூக்கி உள்ளிட்ட சிலரை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பிக் பாஸ்  டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட நடிகர் முனவர் ஃபரூக்கி
பிக் பாஸ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட நடிகர் முனவர் ஃபரூக்கி

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் ஃபோர்ட் பகுதியில் உள்ள சட்டவிரோதமாக இயங்கிவந்த ஹூக்கா பார் ஒன்றில் நேற்று இரவு, காவல்துறையின் சமூக சேவைப் பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஹெர்பல் ஹூக்கா பார் என்ற பெயரில் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த பாரில் இருந்த சிலரையும் போலீஸார் தடுப்புக் காவலில் எடுத்தனர். அதில் பிக் பாஸ் சீசன் 17 டைட்டில் வின்னர் நடிகர் முனவர் ஃபரூக்கியும் இருந்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ​​நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபரூக்கி உள்ளிட்டோர் ஹூக்காவை புகைத்தனர். அந்த வீடியோவும் எங்களிடம் உள்ளது" என்று தெரிவித்தார். சர்ச்சை கருத்து கூறி ஏற்கெனவே கைது செய்யப்பட் ஃபரூக்கி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in