கன்னடாவை சேர்ந்த பிக் பாஸ் போட்டியாளரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கன்னட பிக் பாஸில் போட்டியாளராக இருந்து வருபவர் வர்தூர் செல்வம். இவர் அண்மையில் கழுத்தில் புலி நகம் பதித்த லாக்கெட்டை அணிந்தவாறு டிவியில் பேசி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த வனத்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக புலி நகங்களை வைத்திருந்ததாக கூறி செல்வத்தின் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் வர்தூர் செல்வத்தை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.