45 நாளில் ரூ.2.50 லட்சம் கலெக்சன்... குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த பெண் கைது!

குழந்தைகளை வைத்து பிச்சை
குழந்தைகளை வைத்து பிச்சை

மத்திய பிரதேசத்தில் குழந்தைகளை பிச்சையில் ஈடுபடுத்தி, 45 நாள்களில் ரூ.2.50 லட்சம் வருமானம் ஈட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

பிடிபட்ட பெண், அவரது மகள்
பிடிபட்ட பெண், அவரது மகள்

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் இந்திரா பாய் என்ற பெண், தனது மகள் மற்றும் மேலும் 4 குழந்தைகளை, கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைத்துள்ளார். இந்தப் பெண் கடந்த 45 நாள்களில் பிச்சை மூலம் ரூ.2.50 லட்சம் சம்பாதித்துள்ளார்.

இந்நிலையில், தொண்டு நிறுவனத்தினருடன் சமீபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திராபாயை அங்குள்ள போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தான் அவர் குழந்தைகளை பிச்சையில் ஈடுபட வைத்தது தெரியவந்தது. இதையடுத்து இந்திராபாயை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து இந்தூர் போலீஸார் தரப்பில் கூறியதாவது: "இந்திராபாய் தனது மகள் தவிர, 10, 8, 3 மற்றும் 2 வயதுடைய 4 குழந்தைகளை பிச்சையில் ஈடுபடுத்தியுள்ளார்.

பிச்சை
பிச்சை

உஜ்ஜைன் மகா காலேஷ்வர் கோயிலுக்கு சாலைகள் பிரியும் லவ்-குஷ் சதுக்கத்தில் குழந்தைகளை நிறுத்தி பிச்சையெடுக்க வைத்துள்ளார். உஜ்ஜைன் சென்று திரும்பிவரும் பக்தர்கள் பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுக்க மறுப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்பதால் அப்பகுதியில் குழந்தைகளை நிற்க வைத்து யாசகம் பெற்றுள்ளார்.

தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் குழந்தைகளை பிச்சை எடுப்பதை கண்டு விசாரித்துள்ளனர். அப்போது இரண்டு குழந்தைகளிடமிருந்து ரூ.20 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டது. இதன் காரணமாக, இந்திராபாய் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகே இந்த விஷயம் எங்கள் கவனத்துக்கு வந்தது.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

பிச்சை எடுத்த இந்திராபாயிடம் ஸ்மார்ட் போன் இருந்தது. மேலும், ராஜஸ்தானின் கோட்டா அருகே மாடி வீடு 2, விவசாய நிலம் ஆகியவற்றை வாங்கியுள்ளார். தனது கணவருக்கு பைக் வாங்கி கொடுத்துள்ளார். இவை அனைத்துமே பிச்சை எடுத்த பணத்தின் மூலம் வாங்கியது”

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in